ADDED : ஜூன் 01, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு : உலக புகையிலை தினத்தையொட்டி, திருச்செங்கோடு இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சங்க தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.திருச்செங்கோடு போலீஸ் எஸ்.ஐ., சுப்பிரமணியம், கொடியசைத்து துவக்கி வைத்தார். கே.எஸ்.ஆர்., பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் சரத் அசோகன் முன்னிலையில், மாணவர்கள் தெரு நாடகம் மூலம் புகையிலை பயன்பாட்டின் விளைவுகளை விளக்கி கூறி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணி, நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணாசிலையை அடைந்தது. இதில், துண்டு பிரசுரம் வழங்கியும், விழிப்புணர்வு கோஷம் எழுப்பியும் சென்றனர்.