/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று 78வது சுதந்திர தின விழா
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று 78வது சுதந்திர தின விழா
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று 78வது சுதந்திர தின விழா
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று 78வது சுதந்திர தின விழா
ADDED : ஆக 15, 2024 06:54 AM
நாடு முழுதும், இன்று, 78வது சுதந்திர தினவிழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினவிழா நடக்கிறது.இதையொட்டி, கொடிக் கம்பம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை, 9:05 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் உமா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.இதையடுத்து, தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை கவுரவிக்கிறார். மேலும், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்குகிறார். தொடர்ந்து, பல்வேறு அரசுத்துறை சார்பில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.முடிவில், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று மாலை, கொடிக்கம்பம் அமைந்துள்ள மேடை மற்றும் மைதானம் முழுதும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், நேற்று மின்னொளியில் ஜொலித்தன.