நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவிலில், சித்திரை தேரோட்ட விழா, இன்று மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு திரளான பக்தர்கள் வடம்பிடித்து, தேரை கிழக்கு வாசலில் நேர் நிறுத்துவர்.
தொடர்ந்து, மாலை, 4:30 மணிக்கு ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து தேரை வடம் பிடித்து இழுப்பர். தேரில், அத்தனுார் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

