/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திறந்த இரண்டு ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத கழிவறை
/
திறந்த இரண்டு ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத கழிவறை
திறந்த இரண்டு ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத கழிவறை
திறந்த இரண்டு ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத கழிவறை
ADDED : ஜூலை 22, 2025 02:11 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பொதுக்கழிவறை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கழிவறையின் செப்டிக் டேங்க் நிரம்பிவிட்டது. நிரம்பி வெளியேற தொடங்கியதால் இப்பகுதி மக்கள் கழிவறையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். செப்டிக் டேங்க் நிரம்பியதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியாக செல்லபவர்கள் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கழிவறையின் செப்டிக் குழி ஆழம் குறைவாக வெட்டியுள்ளனர். மழைநீர் சேகரிப்பு குழிபோல் இருந்தது. அதனால் தான், இரண்டு ஆண்டுகளில் நிரம்பி விட்டது. செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்வதுடன், ஆழமாக அமைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்' என்றனர்.

