டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு நாளை இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு நாளை இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 27, 2026 03:04 AM
நாமக்கல்: 'டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான இல-வச பயிற்சி வகுப்பு, நாமக்கல்லில் நாளை துவங்குகிறது' என, கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 821 காலிப்பணியி-டங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ, தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள், செப்., 9. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, புதி-தாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்-படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை (ஆக., 28) காலை, 10:30 மணிக்கு தொடங்குகிறது.வேலைவாய்ப்பு மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2025-26ல் வெளியான தேர்வு முடிவுகளில் மட்டும், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 17 பேர், குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வில், 15 பேர், சீருடைப்பணி-யாளர் போலீஸ் தேர்வில், 19 பேர், பி.ஜி.டி.ஆர்.பி., தேர்வில், 2 பேர், கூட்டுறவுத்துறை தேர்வில், 23 பேர், ஹெல்த் இன்ஸ்-பெக்டர் தேர்வில், 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்-பிடத்தக்கது.
ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து-கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286--222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, இணை-யதளம் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலை-வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, மொபைல் எண் அடங்கிய சுயவிபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
