ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: 'எஸ்.பி.பி., காலனி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கல்லுாரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி, நான்கு நாட்கள் நடக்கிறது' என, நாமக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சுப்பிரமணியம் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''சென்னை சூப்பர் கிங் மற்றும் நாமக்கல் மாவட்டம் கிரிக்கெட் சங்கம் இணைந்து, நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி, பள்ளிப்பாளையம் அருகே எஸ்.பி.பி., காலனி விளையாட்டு மைதானத்தில், வரும், 15 முதல், 18 வரை, நான்கு நாட்கள் நடக்கிறது. இதில், வெற்றி பெற்ற அணிக்கான இறுதி போட்டி, மே, 2ல் நடக்கிறது,'' என்றார்.

