ADDED : ஜன 20, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு கடும் குளிர் வீசியது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் ராசிபுரம், சிங்களாந்தபுரம், பேளுக்குறிச்சி, பட்டணம், ஆண்டகலுார் கேட் உள்ளிட்ட இடங்களில் துாறல் மழை தொடங்கியது.
காலை, 5:00 முதல், 7:00 மணி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், காலை நேரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் அவ்வப்போது துாறல் மழை பெய்து வந்தது. காற்றும் அதிகமாக வீசியதால், பகலிலேயே குளிரத்தொடங்கியது.