/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 12, 2024 07:07 AM
சேந்தமங்கலம் : கொல்லிமலை அருவிகளில், தண்ணீர் இல்லாமல் வறண்டாதால், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சுற்றுலா தளமாக உள்ளது.
இந்த மலைக்கு கோடை கால விடுமுறை நாட்களில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகளுடன் சுற்றுலா பயணிகள் வருவர். இங்குள்ள நம் அருவி, மாசிலா அருவி, ஆகாயகங்கை நீர் வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்வர். இதேபோல், இங்குள்ள அரப்பளீஸ்வரர், மாசி பெரியசாமி, எட்டிக்கையம்மன் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதுடன், வாசலுார் பட்டியில் உள்ள படகு இல்லத்திற்க்கு சென்று மகிழ்வர்.ஆனால், இந்தாண்டு கொல்லிமலையில் போதிய மழை இல்லாததால் மாசிலா அருவி கடந்த 1 மாதத்திற்கு முன்பு மூடப்பட்டது. இதேபோல், தற்போது நம் அருவியும் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளதால், விடுமுறை நாளான நேற்று மலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், கொல்லிமலையில் தீ பற்றிய சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் மிக குறைந்த அளவில் வந்து சென்றனர்.

