/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளம்பெண்ணை கொன்ற டவுன் பஞ்., ஊழியர் கைது
/
இளம்பெண்ணை கொன்ற டவுன் பஞ்., ஊழியர் கைது
ADDED : பிப் 05, 2025 02:28 AM
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே, மாவுரெட்டியை சேர்ந்தவர் சீனிவாசன், 38; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி மணிமேகலை, 32. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
மாதேஸ்வரம்பாளையம் செல்லும் சாலையில் அந்த பெண் இறந்து கிடந்தார். அவரிடம் இருந்த மொபைல் போனில் கடைசியாக பேசிய நபரை போலீசார் தேடினர்.
அப்போது, ஈரோடு மாவட்டம் கொமைரைபாளையத்தை சேர்ந்த, பரமத்தி டவுன் பஞ்., ஊழியர் உதயகுமார், 33, என்பவருடன் அவர் நீண்ட நேரம் பேசியது தெரிந்தது.
சம்பவத்தன்று, போனில் உதயகுமாரை அழைத்த மணிமேகலை, டூ - வீலரில் பரமத்தி நோக்கி சென்றனர்.
அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, வண்டியில் இருந்து மணிமேகலையை, உதயகுமார் கீழே தள்ளி கொன்றார். தலைமறைவாக இருந்த உதயகுமாரை பரமத்தி போலீசார் நேற்று கைது செய்தனர்.