/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரியில் நேரடியாக கலக்கும் டவுன் பஞ்., கழிவுநீர் பொதுமக்கள், பக்தர்கள் புனித நீராடும் அவல நிலை'
/
காவிரியில் நேரடியாக கலக்கும் டவுன் பஞ்., கழிவுநீர் பொதுமக்கள், பக்தர்கள் புனித நீராடும் அவல நிலை'
காவிரியில் நேரடியாக கலக்கும் டவுன் பஞ்., கழிவுநீர் பொதுமக்கள், பக்தர்கள் புனித நீராடும் அவல நிலை'
காவிரியில் நேரடியாக கலக்கும் டவுன் பஞ்., கழிவுநீர் பொதுமக்கள், பக்தர்கள் புனித நீராடும் அவல நிலை'
ADDED : ஆக 04, 2025 09:01 AM
மோகனுார்: 'டவுன் பஞ்., கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், அது தெரியாமல், பொதுமக்கள், பக்தர்கள் புனித நீராடும் அவலநிலை நீடிக்கிறது. அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
மோகனுார் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை மூலம் வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். ஆனால், சுத்திகரிப்பு செய்யாமல், நேரடியாக காவிரி ஆற்றில்வெளியேற்றப்படுகிறது.
அந்த கழிவுநீரும், காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளில் சென்று கலக்கிறது. அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதனால், கழிவுநீரை சுத்திகரித்து தரவேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், பஞ்., நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், மோகனுார் அசலதீபேஸ்வரர் கோவில் படித்துறையில் புனித நீராடுவதற்காக குவிந்தனர்.அப்போது, மோகனுார் டவுன் பஞ்., கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, காவிரி ஆற்றில் நுரை தள்ளிய நிலையில் கலந்தது. அதை பார்த்த பொதுமக்கள், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கழிவுநீர் கலப்பதை அறியாத பலரும் ஆற்றில் குளித்து சென்றனர்.மோகனுார் டவுன் பஞ்., நிர்வாகம், கழிவுநீரை நேரடியாக காவிரி ஆற்றில் கலக்காமல், சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.