/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்கள் புகாரால் டவுன் பஞ்., தலைவர் அவரது கணவர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜர்: கலெக்டர் உத்தரவு

ADDED : ஆக 28, 2025 01:50 AM
ப.வேலுார், ப.வேலுார் தூய்மை பணியாளர்கள் கொடுத்த புகாரின் படி, டவுன் பஞ்., தலைவர் மற்றும் அவரது கணவர் விசாரணைக்கு, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆஜராகினர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்., தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த லட்சுமி உள்ளார். இவர் கணவர் முரளி. இருவரும் துப்புரவு மேற்பார்வையாளர் தாமரைச்செல்வி மற்றும் தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறி, அவர்கள் கடந்த 20ம் தேதி, ப.வேலுார் போலீசில் புகார் அளித்தனர்.
புகார் மீது விசாரணைக்கு போலீசார் சம்மன் அனுப்பிய போதும் ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் லட்சுமி மற்றும் அவரது கணவர் முரளி சாக்கு
போக்கு கூறி ஆஜராகாமல் இருந்தனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசிய தலைவர் லட்சுமி, கணவர் முரளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் டவுன் பஞ்., தலைவர் லட்சுமி மற்றும் கணவர் முரளியிடம் விசாரணை கூட மேற்கொள்ள போலீசார் தயங்கு
கின்றனர்.
தூய்மை பணியாளர்கள் கொடுத்த புகார் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையம் எடுக்கவில்லை என, கடந்த 25 ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தி, ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். விசாரணைக்கு தலைவர் லட்சுமி, அவரது கணவர் முரளி இருவரும் ஆஜராக வேண்டுமென போலீசார் தகவல் அனுப்பினர்.
இந்நிலையில் ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் லட்சுமி, அவரது கணவர் முரளி, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராகினர். ப.வேலுார் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில், தூய்மை பணியாளர்கள் கொடுத்த புகாரின் படி, இருவரிடமும் போலீசார், விசாரணை நடத்தினர்.