sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வரும் 26ல் மத்திய அரசை கண்டித்து டிராக்டர் பேரணி: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

/

வரும் 26ல் மத்திய அரசை கண்டித்து டிராக்டர் பேரணி: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வரும் 26ல் மத்திய அரசை கண்டித்து டிராக்டர் பேரணி: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வரும் 26ல் மத்திய அரசை கண்டித்து டிராக்டர் பேரணி: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு


ADDED : ஜன 20, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'மத்திய அரசை கண்டித்து, வரும், 26ல், ஆரணி நகரில் டிராக்டர் பேரணி நடக்கிறது. விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு, 2024-25 பட்ஜெட்டில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.,) உறுதிப்படுத்தப்படும் என்று அறிவித்தனர். ஆனால், இதுவரை எம்.எஸ்.பி., அறிவிக்கவில்லை. இதனால், மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. எம்.எஸ்.பி., அமல்படுத்தாமல் இருப்பதை கண்டிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள், அந்தந்த மாநிலத்தில் ஒன்றிணைந்து டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மழை, பனி, காற்று, மாசு மற்றும் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக, சிரமங்களை எதிர்கொண்டு வரும் வடமாநில மற்றும் இதர மாநில விவசாயிகள், எம்.எஸ்.பி.,யை உற்பத்தி செலவில் இருந்து, 50 சதவீதம் உயர்த்தி, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாயிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த மின்சார ஒழுங்குமுறை சீர்திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, போராடி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், மத்திய பா.ஜ., அரசை கண்டிக்கும் வகையில் நடத்த உள்ள போராட்டத்திற்கு ஆதரவாக, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், வரும், 26 காலை, 10:30 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர், வேலுார் சாலை, காமராஜர் சிலை அருகில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்குகிறது. இந்த பேரணி, ஆரணி தலைமை அஞ்சலகம் வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும், டிராக்டர் பேரணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us