/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோர்பாளையம் மாட்டு சந்தையில் ரூ.2.50 கோடிக்கு நடந்த வர்த்தகம்
/
மோர்பாளையம் மாட்டு சந்தையில் ரூ.2.50 கோடிக்கு நடந்த வர்த்தகம்
மோர்பாளையம் மாட்டு சந்தையில் ரூ.2.50 கோடிக்கு நடந்த வர்த்தகம்
மோர்பாளையம் மாட்டு சந்தையில் ரூ.2.50 கோடிக்கு நடந்த வர்த்தகம்
ADDED : மே 10, 2025 01:14 AM
மல்லசமுத்திரம், மோர்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தையில், 2.50 கோடி ரூபாய்க்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனையாகின.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தையும்; வெள்ளிக்கிழமை ஆடு, மாடு, கோழி சந்தையும் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று நடந்த சந்தையில் நாட்டு மாடு, 30,000 ரூபாய் முதல், 90,000 ரூபாய்; சிந்து மாடு, 30,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய்; ஜெர்சி மாடு, 40,0000 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய்; கருப்பு சட்டை, 40,000 ரூபாய் முதல், 90,000 ரூபாய்; எருமை, 60,000 ரூபாய் முதல், ஒரு லட்சத்து, 50,000 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், செம்மறி ஆடு, 15,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய்; வெள்ளாடு, 15,000 ரூபாய் முதல், 20,000 ரூபாய்; நாட்டுகோழி, 450 ரூபாய் முதல், 650 ரூபாய்; வளர்ப்பு கோழி, 300 முதல், 500 ரூபாய் என, மொத்தம், 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, மாடுகளை வாங்கி சென்றனர்.