/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆட்டுச்சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம்
/
ஆட்டுச்சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம்
ADDED : ஜன 12, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை, ஆட்டுச்சந்தை கூடு-கிறது. அதன்படி, நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என, மொத்தம், 10,000 ஆடுகள் விற்ப-னைக்கு கொண்டுவரப்பட்டன.
வரும், 14 முதல் பொங்கல் பண்டிகை துவங்க உள்ளதால், சந்-தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையாகின. அதில், ஆடு ஒன்று குறைந்தபட்சம், 5,000 ரூபாய், அதிக-பட்சம், 25,000 ரூபாய் வரை விலைபோனது. ஆட்டுக்குட்டி, 1,500 முதல், 2,000 ரூபாய் வரை விற்பனையானது. 1.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்-தனர்.

