/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கன மழையால் மெட்டாலா அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
/
கன மழையால் மெட்டாலா அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கன மழையால் மெட்டாலா அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கன மழையால் மெட்டாலா அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 09, 2024 06:21 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் பெய்த கன மழைக்கு, மெட்டாலா அருகே பிரதான சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து, துாறல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு, 9:00 மணிக்கு இடி, மின்னலுடன் பெய்த மழை, 2 மணி நேரம் நீடித்தது. மீண்டும், நேற்று காலை, 5:30 மணிக்கு மெட்டாலா, மங்களபுரம், மூலப்பள்ளிப்பட்டி, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே இருந்த, 50 ஆண்டு வாகை மரம் வேருடன், ஆத்துார் பிரதான சாலையில் சாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால், எந்த வாகனங்களும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதை தொடர்ந்து வாகனங்கள் வர தொடங்கின. ஆனால், செல்ல வழியின்றி போக்குவரத்து ஸ்தம்பித்தது. நெடுஞ்சாலைத்துறையினர், மரம் அறுப்பவர்கள், பொதுமக்கள் துணையுடன் மரத்தை வெட்டி அகற்றினர். இருப்பினும், 2 மணி நேரத்திற்கு பிறகே போக்குவரத்து சீரானது.