/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போக்குவரத்து விழிப்புணர்வு வார விழா
/
போக்குவரத்து விழிப்புணர்வு வார விழா
ADDED : மார் 24, 2025 06:31 AM
நாமக்கல்: நாமக்கல் போக்குவரத்து போலீசார் மற்றும் நாமக்கல் கோல்டன் அபெக்ஸ் சங்கம் இணைந்து, போக்குவரத்து விழிப்புணர்வு வார விழாவை கொண்டாடினர்.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். எஸ்.ஐ.,க்கள் குணசிங், வெங்கடேசன், கோல்டன் அபெக்ஸ் சங்க தலைவர் கதிரவன், செயலாளர் அருள்குமார், பொருளாளர் லோகநாயகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் பங்கேற்றார். அதில், கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்கில், ஒளியை கட்டுப்படுத்தும் வகையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்தும், காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.