/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாலத்தில் பேரிகார்டால் போக்குவரத்துக்கு இடையூறு
/
பாலத்தில் பேரிகார்டால் போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஜூலை 06, 2025 12:49 AM
பள்ளிப்பாளையம், ஒன்பதாம்படி பகுதியில் பாலம் வழித்தடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே பழைய பாலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், சங்ககிரி, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ், லாரி, கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பழைய பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். பழைய பாலத்தை கடந்து சென்றால், அடுத்ததாக மேம்பாலம் துவங்கிவிடும். இந்த மேம்பாலம் துவங்கும் பகுதியில், 'பேரிகார்டு' வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிகார்டால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, இரவில் டூவீலரில் செல்லும் வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பேரிகார்டை அகற்ற பள்ளிப்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.