/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தார்ச்சாலை நடுவே வேலி அமைத்து ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
/
தார்ச்சாலை நடுவே வேலி அமைத்து ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
தார்ச்சாலை நடுவே வேலி அமைத்து ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
தார்ச்சாலை நடுவே வேலி அமைத்து ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : நவ 24, 2025 01:32 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, தார்ச்சாலை நடுவே வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்-பட்டுள்ளது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், தொ.ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை; இவரது வயலுக்கு எதிர் திசையில் இருப்பவர் சரவணன்; இருவரும் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் ஓசக்கரையான் ஊற்றுக்கு செல்லும் ஊராட்சி சாலைக்கு, தங்-களது நிலங்களை கொடுத்துள்ளனர். இதையடுத்து, 20 ஆண்டுக-ளுக்கு முன் ஓசக்கரையான் ஊற்று கிராமத்திற்கு செல்ல தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி மூலம் தார்ச்சாலை அமைக்கப்-பட்டது.அந்த சாலையை, ஓசக்கரையான் ஊற்று கிராம மக்கள் மட்டு-மின்றி இப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பயன்படுத்தி வரு-கின்றனர். பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், விளை பொருட்களை எடுத்துச்செலல்லும் விவசாயிகள் என, தினமும் நுற்றுக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, மணிமேகலைக்கும், பக்கத்து காட்டை சேர்ந்த சர-வணன் என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், சாலைக்கு கொடுத்த நிலத்தை எடுத்துக்கொள்வதாக கூறியதுடன், தார்ச்சாலை நடுவே பள்ளம் பறித்து வேலி அமைத்துவிட்டார். இதனால், அங்குள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவன மூட்டைகளை ஏற்ற லாரிகள் செல்ல முடியாமல், விவசாயிகள், பொதுமக்கள், இருசக்கர வாக-னங்கள், டிராக்டர் உள்ளிட்டவை எடுத்து செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சம்பவம் தொடர்பாக, மணிமேகலை மற்றும் அப்பகுதி மக்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன், வட்டார வளர்ச்சி அலு-வலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தற்போது சாலை நடுவே கம்பி வேலி அமைத்ததால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் சிர-மத்துக்குள்ளாகி வருகின்றனர்.

