/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போக்குவரத்து அதிகாரிகள் தணிக்கை வரி, தகுதிச்சான்று இல்லாத 9 வாகனம் பறிமுதல்
/
போக்குவரத்து அதிகாரிகள் தணிக்கை வரி, தகுதிச்சான்று இல்லாத 9 வாகனம் பறிமுதல்
போக்குவரத்து அதிகாரிகள் தணிக்கை வரி, தகுதிச்சான்று இல்லாத 9 வாகனம் பறிமுதல்
போக்குவரத்து அதிகாரிகள் தணிக்கை வரி, தகுதிச்சான்று இல்லாத 9 வாகனம் பறிமுதல்
ADDED : ஜன 04, 2026 07:29 AM
ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சாலை வரி செலுத்தாத மற்றும் தகுதிச்சான்று இல்லாத, 9 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை வசூலிக்கவும் போக்-குவரத்துத்துறை சார்பில் அவ்வப்போது வாகன தணிக்கை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார், ராசிபுரம் எல்லைக்குட்பட்ட பகுதி-களில், நேற்று திடீர் வாகன
தணிக்கை மேற்-கொண்டார்.
அப்போது, தகுதிச்சான்று புதுப்பிக்காத, 6 டாடா ஏஸ், ஒரு சுற்றுலா கார், சாலை வரி செலுத்தாத, 2 ஜே.சி.பி., வாகனங்கள் என, மொத்தம், 9 வாக-னங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ராசிபுரம் அலு-வலக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற, 5 கனரக சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இந்த தணிக்கை மூலம் இணக்க கட்டணமாக, 2.85 லட்சம் ரூபாயும், சாலை வரி செலுத்தாத வாகனங்களுக்கு வரியாக, 80,000 ரூபாயும் என மொத்தம், 3.65 லட்சம் ரூபாய் அப-ராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் கூறுகையில், ''தகுதிச்சான்று புதுப்பிக்காமலும், அதிக எடை
ஏற்றியும் பொது-சாலையில் வாகனங்களை இயக்கக்கூடாது.
மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்-படும். இனிவரும் காலங்களில் ராசிபுரம், நாமகி-ரிப்பேட்டை, மங்களபுரம்,
ஆயில்பட்டி, வெண்-ணந்துார் போன்ற பகுதிகளில் அடிக்கடி வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

