/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டுறவு மேலாண் நிலையத்தில் அஞ்சல் வழி பயிற்சி
/
கூட்டுறவு மேலாண் நிலையத்தில் அஞ்சல் வழி பயிற்சி
ADDED : ஜூன் 14, 2025 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், 2024-25ம் ஆண்டின் நிரந்தர பணியாளர்களுக்கான, 24வது அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி துவக்க விழா நடந்தது. நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, குத்து விளக்கு ஏற்றி வைத்து வகுப்புகளை துவக்கி வைத்து, பயிற்சியாளர்களுக்கு கையேடுகளை வழங்கினார்.
துணைப்பதிவாளர் மற்றும் பயிற்சி நிலைய முதல்வர் செல்வகுமார், விரிவுரையாளர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கர், விவேகானந்தர், சிவசுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.