/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஆக 26, 2025 01:45 AM
நாமக்கல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக்குழு சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கைலாசம் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜா வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்து பேசுகையில், ''இந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டு தகவல்களை முழுவதுமாக உள்வாங்கி, மற்ற குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும்.
உள்ளூர் அளவிலான நீர் குறித்த முழுமையான தகவலையும், விழிப்புணர்வையும், மாணவர்களுக்கு அளித்து, அவர்களை ஆய்வு செய்து, ஆய்வுக்கு உட்படுத்தி பரவலாக கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.பேராசிரியர் துரைசாமி, ஆய்வு சம்பந்தமான தகவல்களை ஆசிரியரிடம் பரிமாறிக்கொண்டார். மேலும், 'நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்' என்ற தலைப்பில், நீர் சூழலும் பாதுகாப்பு மற்றும் நீர் சார்ந்த பொது சுகாதாரம், மருத்துவம், நீர் சார்ந்த நோய்கள், நீர் அனைவருக்கும் ஆனது, நீர் பாதுகாப்பில் பாரம்பரிய நவீன தொழில் நுட்பம் குறித்து விளக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநில செயலாளர் சேதுராமன், ஆய்வுகள் குறித்து விரிவான திட்டமிடல் பற்றி எடுத்துரைத்தார். முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.