மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி களப்பணியாளருக்கு பயிற்சி நிறைவு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி களப்பணியாளருக்கு பயிற்சி நிறைவு
ADDED : ஜூன் 14, 2026 05:15 AM
நாமக்கல்:இந்தியாவில்,
1872 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தற்போது நடக்க
உள்ள கணக்கெடுப்பு, நாட்டின், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும்,
சுதந்திரத்திற்கு பின், 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும்
இருக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும்
டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்
படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலம் தங்கள்
விபரங்களை தெரிவிக்கும், சுய கணக்கெடுப்பு வரும், ஜூலை, 17 முதல், 31
வரை நடக்கிறது.கணக்கெடுப்பாளர் மூலம் வீடுகள் தோறும்
மேற்கொள்ளப்படும். வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு
பணி, வரும் ஆக., 1 முதல், 30 வரை நடக்கிறது.
மாவட்டத்தின் முதன்மை
மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக கலெக்டர் செயல் படுகிறார்.
மாநகராட்சி பகுதிக்கு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக
மாநகராட்சி ஆணையாளரும், டி.ஆர்.ஓ., மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு
அலுவலராகவும் செயல்படுகின்றனர்.
ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதி களில் பொறுப்பு அலுவலர்
களாக, 8 தாசில்தார்கள், 4 நகராட்சி ஆணையாளர்கள், 19 டவுன் பஞ்., செயல் அலுவலர்களும் செயல்பட உள்ளனர்.
மக்கள்
தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு
ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில், 3,068
கணக்கெடுப்பாளர்களும், 472 மேற்பார்வையாளர்களும், வீடுகள் தோறும்
சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.
இப்பணியை
மேற்கொள்ளும் பொருட்டு களப்பயிற்றுனர்களாக, 66 கல்லுாரி
பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் புள்ளியியல் துறையை
சேர்ந்த வட்டார புள்ளியியல் ஆய்வாளர்களுக்கு, 3 நாட்கள் பயிற்சி
அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பு, கடந்த, 10ல் தொடங்கி, நேற்று
முடிவடைந்தது.
