/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழில் முனைவோருக்கான பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
/
தொழில் முனைவோருக்கான பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
தொழில் முனைவோருக்கான பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
தொழில் முனைவோருக்கான பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
ADDED : செப் 27, 2024 07:17 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத்தில் உள்ள, தேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் (இ.டி.ஐ.ஐ.,) இணைந்து, தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. அகமதாபாத் இ.டி.ஐ.ஐ., நிறுவனம் பாடத்திட்டத்தை தீர்மானிக்கும். பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும்.
இதற்கான வகுப்புகள் அக்., 14ம் தேதி தொடங்கும். இதற்கான நேர்காணல் இம்மாதம் இறுதியில் நடைபெறும். பயிற்சியில், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் சேர்ந்து பயன்பெறலாம். இந்த பாடநெறி, ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு, இது ஒரு வாய்ப்பாகும். பயிற்சி சென்னையில் உள்ள இ.டி.ஐ.ஐ., மையத்தில் உயர் தரத்துடன் கூடிய வகுப்பறையில் நடத்தப்படும்.
பயிற்சிக்கான கட்டணம், 80 ஆயிரம் ரூபாய் என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை இரு தவணைகளாக பிரித்து, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளரின், 99523-71533, 86681-01638 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.