தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முதலாம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி

முதலாம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி

முதலாம் ஆண்டு கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : ஜூலை 09, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:மாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்ஞாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமை வகித்தார். நேற்று முன்தினம் இறுதி நாள் நிகழ்ச்சியாக வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டி மையம் சார்பில், மாணவர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி, போட்டி தேர்வு, நேர்காணலில் பங்கு கொள்வதற்கான நுண்திறன் பயிற்சி, பல்வேறு நிறுவனங்களில் நடத்தப்படும் வளாக தேர்வுகள் பற்றி எடுத்துரைத்து மாணவர்களை திட்டமிட்டு செயல்பட வலியுறுத்தப்பட்டது.

அடுத்ததாக, முன்னாள் மாணவர்களான இயற்பியல் துறையை சார்ந்த தியானேஷ்வர் பிரசாத், தமிழ் துறை கோபிகா, கணிதவியல் துறை கவுரி ஆகியோர், தங்கள் வாழ்வை மேம்படுத்த இந்த கல்லூரி எவ்வாறு உதவிகரமாக இருந்தது என்பது குறித்தும், மாணவர்கள் எவ்வாறு படித்து திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us