/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மகளிர் கல்லுாரியில் குரூப்-4 தேர்வுக்கு பயிற்சி
/
அரசு மகளிர் கல்லுாரியில் குரூப்-4 தேர்வுக்கு பயிற்சி
அரசு மகளிர் கல்லுாரியில் குரூப்-4 தேர்வுக்கு பயிற்சி
அரசு மகளிர் கல்லுாரியில் குரூப்-4 தேர்வுக்கு பயிற்சி
ADDED : மே 31, 2025 06:41 AM
நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நேற்று துவங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லுாரி மற்றும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச பயிற்சி வகுப்புகளுக்கான துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், விழாவை துவக்கி வைத்து பேசினார். பயிற்சி வகுப்பில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு இணை இயக்குனர் மணி, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரகாசம் ஆகியோர் பேசினர். நேற்று, துவங்கிய இலவச பயிற்சி வகுப்பு, ஜூலை, 30 வரை, 50 நாட்கள் என, மொத்தம், 200 மணி நேரம் நடக்கிறது. இதில், 150 மாணவியர் பங்கேற்றுள்ளனர். வேதியியல் துறைத்தலைவர் சக்திவேல், உதவி பேராசிரியர் ஜெயந்தி, கவுரவ விரிவுரையாளர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.