/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
/
இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 25, 2025 01:24 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் வட்டார வள மையத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கநிலை, 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி தொடங்கி வைத்தார். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரியதர்ஷினி, பிரேமலதா, கோமதி செயல்பட்டனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னறி தேர்வு நடத்தி மாணவர்கள் கற்றல் நிலைக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்த பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறன்களை மேம்படுத்துதல், கற்றல் விளைவுகள், தனி, இணை, குழு செயல்பாடுகளை ஊக்குவித்தல், கற்றல் உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது, அடைவுத்திறன் அட்டவணை பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்கள் ஏராளமானோர்
பங்கேற்றனர்.