/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி
ADDED : நவ 07, 2025 12:42 AM
நாமக்கல், நாமக்கல்லில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்--2026 தொடர்பாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி தலைமை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையம்,- ஜன., 1ல் தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், -சேந்தமங்கலம், -நாமக்கல், ப.வேலுார், -திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் கடந்த 4ம் தேதி முதல், வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் பணி தொடங்கியது. டிச., 4 வரை பணி நடைபெறவுள்ளது.
இதில், 717 அங்கன்வாடி பணியாளர்கள், 98 எழுத்தர் பணியாளர்கள் (நகர்புறம்), 2 ஒப்பந்த ஆசிரியர்கள், 151 மதிய உணவு பணியாளர்கள், 1 ஊராட்சி செயலாளர், 197ஆசிரியர்கள், 261 கிராம நிர்வாக அலுவலர், 202 கிராம அளவிலான பணியாளர்கள் என மொத்தம், 1,629 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்பு தீவிர திருத்தத்தினை நடத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர், கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் நகராட்சி, கொளத்துக்காடு, பாவடி தெரு, திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட ராஜாகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யும் பணியை பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு படிவம் வழங்கினார்.

