/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷன் விற்பனையாளர் கட்டுனர்களுக்கு பயிற்சி
/
ரேஷன் விற்பனையாளர் கட்டுனர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 02, 2025 01:40 AM
நாமக்கல் புதிதாக பணியில் சேர்ந்த விற்பனையாளர், கட்டுனர்களுக்கு, பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு, நாமக்கல்லில் நடந்தது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், பொது வினியோக திட்டத்தின் நோக்கம், முக்கியத்துவம், அமைப்பு முறை, செயல்பாடு, ரேஷன் கார்டின் வகைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், பொது வினியோக திட்டம் கணினி மயமாக்குதல் மற்றும் பி.ஓ.எஸ்., செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்கள் பெற விரல் ரேகை சரிபார்ப்பு முறை குறித்து பயற்சி அளிக்கப்பட்டது.
துணைப்பதிவாளர்கள் செல்வி, இந்திரா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

