/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எள் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
எள் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 31, 2024 12:46 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் வட்டாரம், மாவுரெட்டிப்பட்டி கிராமத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், எள் உற்பத்தியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில், 40 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
துணை வேளாண்மை அலுவலர் ராமசாமி, எள் சாகுபடியில் மண் மற்றும் நீர் பரிசோதனையின் முக்கியத்துவம். உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி முறைகள், நுண்ணூட்ட பயன்பாட்டின் பயன்கள், உர மேலாண்மை போன்ற
சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். துணை வேளாண்மை அலுவலர் வைத்தியலிங்கம், விவசாயிக-ளுக்கு எள் பயிர்கள் சாகுபடியில் மண் பரிசோதனை முதல், அறு-வடை வரையிலான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள்
பயன்பாடு, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி விளக்க மளித்தார்.உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல், வேளாண்மை விரி-வாக்க மையத்தில் வைக்கப்பட்டுள்ள இடுபொருட்கள் விப-ரங்கள், வேளாண்மைத்துறை மானிய திட்டங்கள் குறித்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர்
ததிவாகர், அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி கூறினார்.ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் தமிழ்ச்-செல்வன், வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.