/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தென்னை மரத்தில் ஒருங்கிணைந்தபூச்சிநோய் நிர்வாகம் குறித்து பயிற்சி
/
தென்னை மரத்தில் ஒருங்கிணைந்தபூச்சிநோய் நிர்வாகம் குறித்து பயிற்சி
தென்னை மரத்தில் ஒருங்கிணைந்தபூச்சிநோய் நிர்வாகம் குறித்து பயிற்சி
தென்னை மரத்தில் ஒருங்கிணைந்தபூச்சிநோய் நிர்வாகம் குறித்து பயிற்சி
ADDED : ஏப் 17, 2025 02:07 AM
நாமக்கல்:'தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் இன்று நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு, 'கோடையில் தென்னை மரத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
பயிற்சியில், தென்னை பயிரை தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், கோடைகால சூழ்நிலைக்கேற்ப இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், வளர்ச்சியூக்கிகள், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது.இதில், விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அணுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.