/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிரான்ஸ்பார்மர் பழுதால் 12 மணி நேரம் 'பவர்-கட்'
/
டிரான்ஸ்பார்மர் பழுதால் 12 மணி நேரம் 'பவர்-கட்'
ADDED : பிப் 17, 2025 03:19 AM
நாமக்கல்: மோகனுார் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதால், பல கிராமங்களில், 12 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனுாரை அடுத்த ஆரியூரில் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.
இதற்காக சீரியல் விளக்குகள் பயன்படுத்தியதால், ஓவர் லோடு ஏற்பட்டு, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு எஸ்.வாழ-வந்தி துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் பழுதானது. இதனால் ஆரியூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் மின் தடை ஏற்-பட்டது. மின் ஊழியர்கள் புதிய டிரான்ஸ்பார்மரை அமைக்க, நான்கு மணி நேரத்துக்கு பின், 12:00 மணிக்கு இணைப்பு கிடைத்த நிலையில் அதிகாலை, 5:00 மணிக்கு மீண்டும் மின் தடை ஏற்பட்டது.
இதனால் ஆரியூர், மரக்கடை, மணியங்காளிப்பட்டி, பனமரத்துப்-பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம் பாதித்து மக்கள் அவதிக்கு ஆளாகினர். மின்வாரிய அதிகாரிகள் ஆய்வில், மரக்கடை பகுதியில் ஹெச்.டி., மின் கம்பிகள் துண்டிக்கப்பட்-டது தெரிய வந்தது.
மின் வாரிய அலுவலர்கள் முகாமிட்டு சரி செய்யும் பணியில் ஈடு-பட்டனர். ஒரு வழியாக பணி முடிந்து, மதியம், 1:30 மணிக்கு மீண்டும் மின் வினியோகம் கிடைத்தது. மொத்தத்தில், 12 மணி நேரம் மின் தடைபட்டதால் அனைத்து தரப்பினரும் அவதிக்கு ஆளாகினர்.