/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிரான்ஸ்பார்மர் தரம் உயர்த்தி மின் வினியோகம் துவக்கம்
/
டிரான்ஸ்பார்மர் தரம் உயர்த்தி மின் வினியோகம் துவக்கம்
டிரான்ஸ்பார்மர் தரம் உயர்த்தி மின் வினியோகம் துவக்கம்
டிரான்ஸ்பார்மர் தரம் உயர்த்தி மின் வினியோகம் துவக்கம்
ADDED : மார் 17, 2024 02:55 PM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்.,ல், மின்சார வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் தரம் உயர்த்தி மின் வினியோகம் செய்யும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், புதுப்பாளையம், 22 கி.வோ., பீடரை கிராமப்புற வகைபாட்டில் இருந்து, நகர்புற வகைப்பாடாக தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் தொடர்ந்து சீரான தடையற்ற மும்முனை மின்சார வினியோகத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: ராசிபுரம் வட்டம், ரா.புதுப்பாளையம், கட்டணாச்சம்பட்டி, கல்லாங்குளம், சாணார்புதுார், பனங்காட்டூர், அத்திபலகானுார், களரம்பள்ளி, புதுார், மலையாம்பட்டி, பட்டணம், கைலாசம்பாளையம், பட்டணம், முனியப்பம்பாளையம், கருப்பனார் கோவில், வடுகம், மேலுார், கீழூர் உள்ளிட்ட கிராமங்கள் புதுப்பாளையம் மின்சார பாதைக்குட்பட்டது.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், இந்த மின் தடத்தை நகர்புற மின்பாதையாக மாற்றி, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் முயற்சியால், நகர்ப்புற மின்சார பாதையாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஏறத்தாழ, 11,000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர். இவ்வாறு அவர் பேசினார்.
ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துரைசாமி, பட்டணம் டவுன் பஞ்., துணைத்லைவர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

