ADDED : நவ 02, 2024 01:33 AM
அ நிறம் | அளவு
குரங்கிற்கு 'ஷாக்' மீட்டு சிகிச்சை
குமாரபாளையம், நவ. 2-
குமாரபாளையம் கலைமகள் வீதியில், நேற்று காலை, 9:00 மணியளவில், மின்மாற்றியில் ஏறிய குரங்கு மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. இதில் குரங்கு எழுந்து நடக்க முடியாமல் தவித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நாமக்கல்லில் இருந்து, நேற்று மாலை, 2:30 மணிக்கு வனத்துறை, கால்நடை மருத்துவர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், குரங்கை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின், கொல்லிமலை வனப்பகுதியில், குரங்கை பத்திரமாக விடப்பட்டது.
