ADDED : ஜூன் 07, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல் செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமையில் அரசு பெண்கள், ஆண்கள், தொடக்கப்பள்ளிகளில் டவுன் பஞ்., பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு குறித்தும், மரக்கன்றுகள் நடப்படுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.தொடர்ந்து, முக்கிய வீதிகளின் வழியாக சுற்றுச்சூழலை பேணிகாப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேரணி நடத்தப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், டவுன் பஞ்., தலைவர் திருமலை, மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
