ADDED : அக் 28, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் யூனியனுக்கு உட்பட்ட களியனுார் பஞ்சாயத்து பகுதி முழுவதும், கடந்த, இரண்டு நாட்களாக மரக்கன்று நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
. நீர் நிலைகள், சாலையோரம், குடியிருப்பு பகுதி, பொது இடங்களில் மரக்கன்று நடப்படுகிறது. நடப்பட்ட மரக்கன்று பாதுகாப்பாக நல்ல வளர்ச்சியடையும் வகையிலும், கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையிலும், சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.

