/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டட கழிவுகளை ஓடையில் கொட்டி அத்துமீறல்
/
கட்டட கழிவுகளை ஓடையில் கொட்டி அத்துமீறல்
ADDED : மார் 21, 2024 02:13 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், மூலப்பள்ளிப்பட்டியில் ஓடை உள்ளது. மெட்டாலா, பசிறுமலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு குதியில் இருந்து வரும் மழைநீர், இந்த ஓடை வழியாகத்தான் செல்லும். மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் செல்லத்தொடங்கும். இந்த ஓடையால் சுற்றியுள்ள, 100 ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்களில் நீர்மட்டம் உயரும். எனவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து இந்த ஓடையில் பெண்கள் வேலை செய்து சுத்தமாக வைத்துள்ளனர்.
இந்த ஓடையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் துார்வாரி சுத்தம் செய்துள்ளனர். ஆனால், சில நாட்களாக இப்பகுதியை சேர்ந்தவர்கள் பழைய கட்டடங்களை இடித்து அதன் கழிவுகளை, மண், செங்கலை டிராக்டரில் கொண்டு வந்து ஓடையில் கொட்டியுள்ளனர். முக்கியமாக தண்ணீர் செல்லும் பாலத்திற்கு கீழே கொட்டிவிட்டனர். இதனால், தண்ணீர் செல்வது தடைபடுவதுடன் பாலமும் சேதமடையும் அபாயம் உள்ளது.
வருவாய்துறையினர் தலையிட்டு, ஓடையில் கொட்டிய மண்ணை சம்பந்தப்பட்டவர்களே சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

