ADDED : பிப் 03, 2026 06:48 AM
ராசிபுரம்; த.வெ.க., தொடங்கி, மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து, தமிழகம் முழு-வதும் அக்கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உத-விகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில் ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டி-ருந்தது. த.வெ.க., கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். விழாவை-யொட்டி, அப்பகுதி முழுவதும் கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்-டிருந்தது. கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு, தொண்டர்களுக்கும், பொதுமக்க-ளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை, நலத்திட்ட உதவிகளை செந்தில்நாதன் வழங்கினார்.
