/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் கிடக்கும் கம்பத்தால் அவதி
/
சாலையில் கிடக்கும் கம்பத்தால் அவதி
ADDED : ஜன 19, 2025 06:55 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் இருந்து, பேளுக்குறிச்சி செல்லும் சாலையில் பச்சுடையாம்பாளையம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு பணிகளுக்காக, மின் கம்பம் நட சிமென்ட் கம்பங்-களை கொண்டு வந்துள்ளனர். கம்பங்களை சாலையோர உள்ள காலி இடத்தில் இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதன் பிறகு, தேவையான இடத்திற்கு மின் கம்பங்களை கொண்டு செல்லும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொங்கலுக்கு முன்பு சாலையை ஒட்டி, ஒரு கம்பத்தை வைத்து விட்டு சென்றுவிட்டனர். சாலையோரம் வரும் வாகனங்கள் மோதி, கம்பம் சேதமடைந்துள்ளது. அதுமட்-டுமின்றி டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் மோதுவதால், தவறி கீழே விழுந்து விடுகின்றனர். கடந்த இரண்டு தினங்களில் மட்டும், ஐந்துக்கும் மேற்பட்டோர் சாலையில் உள்ள கம்பத்தில் மோதி விழுந்துள்ளனர். எனவே, கம்பத்தை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

