/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையில் பாயும் கழிவுநீரால் அவதி
/
சாலையில் பாயும் கழிவுநீரால் அவதி
ADDED : மார் 05, 2025 06:24 AM
நாமக்கல்: நாமக்கல் - சேலம் சாலை, புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ரிங்ரோடு பணி துவங்கி, முதலைப்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, கூலிப்பட்டி வழியாக திருச்சி வரை செல்கிறது. அதில் சேந்தமங்கலம் சாலையில் உள்ள வேட்டாம்பாடி பகுதியில் ரிங்ரோடு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக அங்குள்ள மெயின் சாக்கடையை அடைத்து வைத்துள்ளனர்.
இதனால், வேட்டாம்பாடி குடியிருப்பில் இருந்து வெளியாகும் சாக்கடை கழிவுநீர், சேந்தமங்கலம் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், பாதசாரிகள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. மேலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சில சமயம் சறுக்கி விழும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே, சாலையில் பாயும் சாக்கடை கழிவுநீரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.