/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
30 மையங்களில் டி.ஆர்.பி., தேர்வு
/
30 மையங்களில் டி.ஆர்.பி., தேர்வு
ADDED : அக் 13, 2025 02:06 AM
நாமக்கல்;நாமக்கல் மாவட்டத்தில், 30 மையங்களில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வில், 7,642 பேர் பங்கேற்றனர். 551 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியருக்கான எழுத்து தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், மோகனுார், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 30 இடங்களில், டி.ஆர்.பி., தேர்வு நடந்தது. அதற்காக, 8,193 தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.
மேலும், 98 மாற்றுத்திறனாளிகள், 15 பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களில், காலை, 8:30 முதல், 9:30 மணி வரை மட்டுமே தேர்வர்கள் மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று நடந்த தேர்வில், 7,642 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். 551 பேர் கலந்துகொள்ளவில்லை. இந்த தேர்வை கண்காணிப்பதற்காக துணை கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.