/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சகதியில் சிக்கிய லாரி பொக்லைன் மூலம் மீட்பு
/
சகதியில் சிக்கிய லாரி பொக்லைன் மூலம் மீட்பு
ADDED : ஜூலை 08, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, ஜூஸ் பேக்டரி அருகில் வயல்வெளிக்கு கம்பிவேலி அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக, கருங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அப்பகுதிக்கு வந்தது.
அந்த லாரி, வயல்வெளியில் இறங்கியபோது சகதியில் டயர்கள் சிக்கின. இதனால், தொடர்ந்து லாரியை இயக்க முடியாமல் டிரைவர் சிரமத்துக்குள்ளானார். இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அரை மணிநேர போராட்டத்திற்கு பின் லாரியை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.