/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சித்திரை தேர் திருவிழாவால் வரும் 6ல் மஞ்சள் ஏலம் ரத்து
/
சித்திரை தேர் திருவிழாவால் வரும் 6ல் மஞ்சள் ஏலம் ரத்து
சித்திரை தேர் திருவிழாவால் வரும் 6ல் மஞ்சள் ஏலம் ரத்து
சித்திரை தேர் திருவிழாவால் வரும் 6ல் மஞ்சள் ஏலம் ரத்து
ADDED : மே 03, 2025 01:21 AM
நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடம் வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கிய மஞ்சள் சந்தையில், நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் மஞ்சள் சீசன் தொடங்கியதால், வாரா வாரம் மஞ்சள் வரத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. தீமிதி விழா மற்றும் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, வரும், 7ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வரும், 6ல் செவ்வாய்க்
கிழமை அன்று நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஏலம் நடந்தாலும் மூட்டை பிடிப்பது, விவசாயிகளுக்கு பணம் வழங்குவது உள்ளிட்ட வேலைகள் புதன்கிழமை தான் நடக்கும்.
புதன்கிழமை, கோவில் திருவிழா என்பதால் ஏலத்திற்கு பின் நடக்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும். அதனால், மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்படுகிறது. வரும், 13ல் வழக்கம் போல் மஞ்சள் ஏலம் நடைபெறும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.