/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 20, 2024 02:06 AM
நாமகிரிப்பேட்டை:சீசன் தொடங்கி, 2வது வாரமாக மஞ்சள் விலை, 22,000 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டையில்
கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட
தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை
நடந்து வருகிறது. சீசன் தொடங்கிய பின் தொடர்ந்து, 2வது வாரமாக,
நேற்று மஞ்சள் விற்பனை நடந்தது.
விரலி ரகம், 100 கிலோ மூட்டை
குறைந்தபட்சம், 12,269 ரூபாய்க்கும், அதிகபட்சம், 20,933 ரூபாய்க்கும்
விற்பனையானது. உருண்டை ரகம் குறைந்தபட்சம், 11,859 ரூபாய்க்கும்,
அதிகபட்சம், 17,069 ரூபாய்க்கும் விற்பனையானது. பனங்காலி ரகம்
குறைந்தபட்சம், 8,469 ரூபாய்க்கும், அதிகபட்சம், 17,069 ரூபாய்க்கும்
விற்பனையானது. விரலி, 490, உருண்டை, 250, பனங்காலி, 100 என, 840
மூட்டை மஞ்சள், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல்,
தனியார் மண்டிகளில் மஞ்சள் விற்பனை நடந்தது. விரலி ரகம், 100 கிலோ
மூட்டை அதிகபட்சம், 23,000 ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் தொடங்கி,
இரண்டு வாரமாக மஞ்சள் விற்பனை, 22,000 ரூபாயை தாண்டி
விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

