தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/லஞ்சம் வாங்கியதாக கைதான இருவரும் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கியதாக கைதான இருவரும் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கியதாக கைதான இருவரும் பணியிடை நீக்கம்


ADDED : ஜூன் 05, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:லஞ்சம் வாங்கியதாக கைதான மாநகராட்சி வருவாய் உதவியாளர்,- பெண் ஊழியர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாநகராட்சி சிலுவம்பட்டியை சேர்ந்தவர் பூபதி, 44, தனியார் நிறுவன ஊழியர். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு வரி செலுத்த வேண்டி மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது வருவாய் உதவியாளர் உதயகுமார், 40, அவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். அவ்வளவு தொகை தன்னால் தர இயலாது என பூபதி கூறினார்.

தொடர்ந்து, 15 ஆயிரம் ரூபாய் கேட்டார். முதல் தவணையாக ரூ.7,000 கொடுத்த பூபதி மீதம் உள்ள, 8,000 ரூபாயை கொடுக்க விரும்பாமல், லஞ்ச ஒழிப்பு போலசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி, ரசாயன பொடி தடவப்பட்ட, 8,000 ரூபாயை உதயகுமாரிடம் பூபதி கொடுத்தார். அந்த பணத்தை உதயகுமார் தற்காலிக துாய்மை பணியாளர் கலாவிடம், 52, கொடுத்தார். அந்த நேரம் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான இருவரையும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us