ADDED : ஏப் 29, 2026 05:28 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியம், பழந்தின்னிப்பட்டி பஞ்., பகுதியில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த மாதம், 12ம் தேதி நடந்தது. அதையொட்டி, இரவு நேரத்தில் சப்தாவரணம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பை சேர்ந்த சில இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இந்த வழக்கில், வெண்ணந்துார் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரேம்குமார், 24, அலவாய்ப்பட்டி குண்டு பெருமாள் கோவில் கரடு பகுதியை சேர்ந்த ரவி மகன் அன்புராஜ், 26, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று தச்சங்காடு பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்.
