ADDED : ஜூலை 28, 2025 04:03 AM
நாமகிரிப்பேட்டை: நமகிரிபேட்டை ஒன்றியம், பிலிப்பாக்குட்டையை அடுத்த கண-வாய்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கிருஷ்ணசாமி, 60; இவரது மகன் பரத், 25; இவரது பக்கத்து காட்டை சேர்ந்-தவர் ரங்கசாமி மகன் ரவி, 48; இவரது மனைவி சத்தியப்பிரியா, 43; இவர்களது மகன் கவுதம், 21; இரு தரப்பினருக்கும் நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவ-ரது குடும்பத்தினருக்கும்
முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனியாக வந்த கிருஷ்ணசா-மியை, ரவி, சத்தியப்பிரியா, கவுதம் ஆகியோர் தாக்கியுள்ளனர். அதேபோல், கிருஷ்ணசாமி மற்றும் பரத் இருவரும் சத்தியப்
பிரியா உள்ளிட்ட இருவரையும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தனர். புகார்படி, ரவி, கவுதமை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி, பரத்தை தேடி வருகின்-றனர்.