/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்தியர்கள் இருவர் தேர்வு
/
சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்தியர்கள் இருவர் தேர்வு
சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்தியர்கள் இருவர் தேர்வு
சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்தியர்கள் இருவர் தேர்வு
ADDED : ஆக 03, 2024 06:46 AM
பெங்களூரு: சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல இந்திய விமானப் படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்களான சுபான்ஷு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோரை, 'நாசா' தேர்வு செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரோ பயிற்சி மையத்திலும், ரஷ்யாவிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது ககன்யான் திட்டத்திற்கு முன்னோட்டமாக இஸ்ரோ, அமெரிக்காவின் ஆக்சியோம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்நிறுவனம் விரைவில் நாசா கண்காணிப்பில், ஆக்சியோம் 4 என்ற பெயரில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது. இதில் அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டு வீரர்கள் பங்குபெற்றுள்ளனர். இந்தியா சார்பில் முதன்மை பைலட்டாக குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் அவருக்கு உதவியாக பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் தேர்வாகியுள்ளனர். இந்த விண்வெளி பயணத்தில் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு பலனளிக்கும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.