/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர்கள் மோதி விபத்து :மேலும் ஒருவர் பலி
/
டூவீலர்கள் மோதி விபத்து :மேலும் ஒருவர் பலி
ADDED : பிப் 23, 2024 01:41 AM
எருமப்பட்டி;சேந்தமங்கலம் அருகே, அக்கியம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில், திருவண்ணாமலை மாவட்டம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ராஜா, 25, விழுப்புரம் மாவட்டம், கங்கையனுார் பகுதியை சேர்ந்த ரகுமான், 26, ஆகியோர் வேலைசெய்து வந்தனர்.
இவர்கள் இருவரும், கடந்த, 18ல் தனியார், 'வேபிரிட்ஜ்' அருகே டூவீலரில் அதிவேகமாக சென்றனர். எதிரே, சேந்தமங்கலம் புதுகாந்திபுரத்தை சேர்ந்த ஞானசேகரன், 26, என்பவர் டூவீலரில் வந்துள்ளார். அப்போது, இரண்டு டூவீலர்களும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜா, ரகுமான் ஆகிய இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், ராஜா உயிரிழந்தார்.