/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
/
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
ADDED : மே 29, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்,குமாரபாளையம், எதிர்மேடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 29; லேத் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, சேலம்-கோவை புறவழிச்சாலை, ஜே.கே.கே., முனிராஜா கல்லுாரி அருகே சாலையை நடந்தபடி கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த டூவீலர், அவர் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். கோபாலகிருஷ்ணனை, ஈரோடு தனியார் மருத்துவமனையிலும்; விபத்துக்கு காரணமான, கோவை தனியார் கல்லுாரி மாணவர் நவீன், 22, கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். குமாரபாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.