ADDED : அக் 10, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
பள்ளிபாளையம்:பள்ளிப்பாளையம்
அடுத்த அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சரோஜா, 40; கூலித்தொழிலாளி. இவர்,
தன் வீட்டிற்கு வெளியே, கடந்த, நான்கு நாட்களுக்கு முன் இரவு, 'ஸ்கூட்டி
பெப்' வாகனத்தை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது
டூவீலரை காணவில்லை. இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசில்
புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையும்
மேற்கொண்டனர்.
இதில், பக்கத்து வீட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி
விஜயகுமார், 35, என்பவர் மது போதையில் டூவீலரை திருடி சென்றது
தெரியவந்தது. மேலும், டூவீலரில் செல்லும் போது, பெட்ரோல் தீர்ந்ததால்
அதை அப்படியே விட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது. நேற்று இரவு,
விஜயகுமாரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 'ஸ்கூட்டி பெப்'
வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
